உத்தமபாளையம் பகுதியில் மாவாக அரைத்து கடத்தப்பட்ட அரசின் விலையில்லா அரிசி..

தமிழக அரசு விலையில்லா அரிசியை மக்களின் நலன் கருதி வழங்கி வருகிறது, இதைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் விலையில்லா அரிசிகளை பலவழிகளில் சேகரித்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு விற்பனை செய்து வந்தனர், இந்த விபரம் தமிழக அரசுக்குத் தெரிய வந்ததால் அரிசிகடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தது, இதனால் அரிசி கடத்தல் குறைக்கப்பட்டது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டும், அரிசிக்கும் அபதாரம் விதிக்கப்பட்டு வந்தது.

இதனால் அரிசி கடத்தல்காரர்கள் அரிசி களை சேகரித்து மாவுகளாக அரைத்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.  இதைக் கண்டு பிடித்த வட்ட வழங்கல் அதிகாரிகள் போட்டி மெட்டு வழியாக மினி லாரியில் கடத்த விருந்த மாவு மூடைகளை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் அனைவரும் போடி மெட்டு, கம்ப மெட்டு, குமுளி வழியாக மாவு மூடைகளை கடத்தி வந்தனர். இந்த விபரம் சென்னை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் உத்தரவுப்படி உத்தமபாளையம் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர், அந்த தேடுதலில் போடி, சின்னமனூர், கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் ரைஸ்மில்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சின்னமனூரில் உள்ள பானு ரைஸ் மில்லில் சோதணை செய்த போது அரைப்பதற்கு வைக்கப்பட்ட 210 ரேசன் அரிசி மூடைகள் இருப்பது கண்டுபிடித்து அரிசியைக் கைப்பற்றினர், மாவு அரைக்க வேலை செய்து கொண்டிருந்த, அழகுவேல் பாண்டி, மற்றும் சத்தியருமார் ஆகியோரைப் பிடித்து விசாரித்துள்ளனர், விசாரணையில் கூடலூரைச் ஹக்கீம் என்பவர் தலைமையில் தான் ரேசன் அரிசியை சேகரித்து பல ஊர்களில் ரைஸ்மில்களை தவணைக்கு எடுத்து மாவாக அரைத்து கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது, உடனே இருவரின் வாக்கு மூலப்படி மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரைக் கைது செய்தனர், தொடர் விசாரணை மேற்கொண்டு ரைஸ் மில்லுக்கும் சீல் வைத்தனர். தொடர் குற்றச் செயலில் தலைவராகச் செயல்பட்டு வந்த கூடலூர் ஹக்கீம் தப்பியோடிவிட்டதாகவும், தனிப்படை தேடி வருவதாகவும், தெரிய வருகிறது.

#Paid Promotion