Home செய்திகள்உலக செய்திகள் உயர் தொழில்நுட்ப உடனொளிர்வு நுண்ணோக்கி (Super Resolution Microscope) மேம்படுத்திய நோபல் பரிசு பெற்ற இசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 23, 1962).

உயர் தொழில்நுட்ப உடனொளிர்வு நுண்ணோக்கி (Super Resolution Microscope) மேம்படுத்திய நோபல் பரிசு பெற்ற இசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 23, 1962).

by mohan

இசுடீபன் டபுள்யூ. ஹெல் (Stefan W. Hell) டிசம்பர் 23, 1962ல் உருமேனியாவின் அராட் நகரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் 1990ல் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1991 முதல் 1993 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் சோதனைக் கூடத்தில் பணிபுரிந்தார். அங்கு 4-Pi மைக்ரோஸ்கோப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். அடுத்த 3 ஆண்டுகள் பின்லாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தூண்டப்பட்ட வெளியேற்ற சிதைவு (STED Microscopy) கோட்பாட்டை மேம்படுத்தினார். ஆப்டிகல் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதுபடுத்திப் பார்க்கப்படும் பொருட்களில் தெளிவு இல்லாத நிலை இருந்தது. ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன், ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நானோ பரிமாணத்தை எட்ட முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

2002ம் ஆண்டில் இருந்து ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் உயிரி வேதியியல் நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நானோ பயோ ஃபோட்டோனிக்ஸ் துறையை இங்கு நிறுவியுள்ளார். ‘ஸ்டெட்’ நுண்ணோக்கியியல் வளர்ச்சியிலும் பிற மைக்ரோஸ்கோப்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 200 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டில் ஒளியியல் சர்வதேச ஆணைக்குழு இவருக்கு ‘ஆட்டோ ஹான்’ பரிசை வழங்கியது. கார்பர் ஐரோப்பிய அறிவியல் விருது உட்பட 30 விருதுகள், ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். ஜெர்மனியின் புற்றுநோய் ஆய்வு மைய ஆப்டிகல் நானோஸ்கோபி துறைத் தலைவராகவும், ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

இவரது பங்களிப்புடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப் மூலம் செல் பிரிவதை மிக நுண்ணிய நானோ அளவில் காண முடியும். ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரையறைக்கு உட்பட்டதாக இருந்த மைக்ரோஸ்கோப் மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நானோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. அல்ஸீமர், பார்கின்சன் போன்ற நோய்களுக்கு மூலகாரணமான புரோட்டீன்களை இந்த மைக்ரோஸ்கோப் மூலம் அடையாளம் காணமுடியும். மருந்தில்லா நோய்களை முற்றிலும் தடுப்பதற்கான பல ஆய்வுகளுக்கு இந்த நானோஸ்கோப் வித்திட்டுள்ளது. நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் (Super Resolution Microscope) மேம்பாட்டிற்காக 2014ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னருடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!