கீழக்கரையில் SDPI கட்சி சார்பில் 72வது குடியரசு தின விழா..

இந்திய தேசத்தின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  நகர் தலைவர் ஹமீது பைசல் கொடி ஏற்றினார். வரவேற்புரை நகர் பொருளாளர் தாஜுள் அமீன் மற்றும்  தொகுப்புரையை நகர் செயலாளர் பகுருதீன்,  சிறப்புரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் அஹமது நதீர் மற்றும்  எஸ்டிபிஐ நகர் தலைவர் ஹமீது பைசல் ஆகியோர் வழங்கினர். நன்றியுரையை வர்த்தக அணி நகர் தலைவர் செய்யது யாசீன் கூறினார்.

முன்னிலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிருவாகிகள், எஸ்டிபிஐ தொகுதி கிளை நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்