தூத்துக்குடி அரபிக் கல்லூரியில் 70 ஆவது குடியரசு தின விழா ..

தூத்துக்குடி ஜாமியா பள்ளி வளாகத்தில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 40 ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிற மன்பவுஸ்ஸலாஹ் அரபி கல்லூரியில் வைத்து அதன் செயலாளர் ஹாஜி F.அபூபக்கர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுள்ளாஹ் ஹலாரத் ,துணை முதல்வர் உள்ளிட்ட 80 மாணவர்களும் அரபிக் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி சா. முஜிபுர் ரஹ்மான் ஆலிம் மற்றும் ஏராளமான இஸ்லாமியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து அரபி கல்லூரியின் நூஹ் ஹாலரத் நினைவு அரங்கத்தில் இந்திய குடியரசு தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட அரச காஜி அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்

கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினர் மாணவர்கள் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார்கள் தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி