குடியரசு தின விழா ஒத்திகை பேரணி எஸ்பி முரளிரம்பா பார்வையிட்டார்..

தூத்துக்குடி மாவட்டத்தில் (26.01.2019 )நாளை நடைபெற உள்ள 70 ஆவது இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு இன்று (25.01.2019) தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆயுதப் படை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது இந்த அணிவகுப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா பார்வையிட்டார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்கள் அணிவகுப்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ,படைப்பிரிவு தலைவர்களாக உதவி ஆய்வாளர்கள் 1 ஆம் பிரிவு வெங்கடேஷ் , 2 ஆம் பிரிவி செல்வகுமார், 3ஆம் பெண்கள் பிரிவு ராஜகுமாரி, 4ஆம் பிரிவு சிவகுமார், ஊர்க்காவல் படை பிரிவு வேலப்பன், தீயணைப்புத்துறை சங்கரன், தமிழ்நாடு 29ஆவது பட்டாலியன் ராணுவ தேசிய மாணவர் படை மாணவர் பிரேம் குமார், தமிழ்நாடு கப்பற்படை 3 ஆவது அணியின் கப்பற்படை தேசிய மாணவர் படை பிரிவின் மாணவர் அர்ஜுன், சாரணர் படை பிரிவு மாணவர் பெரியசாமி, இசைக்குழு பிரிவு தலைமை காவலர் சீனிவாசன், ஆகியோர் தலைமையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், பயிற்சி உதவி கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி