திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்றுவட்டார பகுதியில் சமூகநல கூட்டமைப்பு சார்பாக இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழா..

70 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகள் சமூக நல அறக்கட்டளைகள் ஒன்றினைந்து தென்காசி அரசு மருத்துவமனை இரத்தவங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது..

இரத்ததான முகாமில் 30க்கும் மேற்பட்ட இரத்தகொடையாளிகள் தங்கள் குருதியினை தானமாக வழங்கினர். இரத்ததான முகாமினை நீட் எதிர்ப்பு போராளி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள், துவங்கிவைத்து அனைவரையும் பாராட்டினர். மேலும் இரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்,நினைவுபரிசு, மரக்கன்று., வழங்கப்பட்டது. மேலும் தென்காசி அரசு மருத்துவமனையில் மரக்கன்று நட்டுவைக்கப்பட்டது.

முகாமில் சாம்பவர்வடகரை NFS அறக்கட்டளை., இரத்ததான கழகம், சுரண்டை கலாமின் கனவுகள், காமராஜர் இரத்ததான கழகம், ஆதரவு கரங்கள், தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம், தென்காசி தி இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட், ப்ராணா மரம் வளர் இயக்கம், பசியில்லா தென்காசி, அகில இந்திய மாணவர்கள் பொதுநலச்சங்கம்.. நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள்  கலந்துகொண்டனர். தென்காசி அரசு மருத்துவமனை இரத்தவங்கி சார்பாக மருத்துவர் திரு.ராமநாதன், இரத்தவங்கி மேலாளர்கள் திரு.திருப்பதி., திருமதி.ராஜாத்தி ஜெகதா., திருமதி ஆயிஷா சிராஜ் நிஷா அவர்கள்., கலந்துகொண்டு தானம் செய்த குருதியினை பெற்றுக்கொண்டனர்.