Home செய்திகள் ராஜபாளையம் கிராம பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாகவும் சுகாதார வசதிகளை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்க சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

ராஜபாளையம் கிராம பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாகவும் சுகாதார வசதிகளை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்க சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

by mohan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் உள்ள 36 பஞ்சாயத்துகளிலும் 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முறையான தாமிரபரணி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் பொதுமக்களிடமிருந்து தண்ணீர் சரிவர வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த கூட்டம் நடைபெற்றதுகூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நாளொன்றுக்கு லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டிய இடங்களில் 30 ஆயிரம் தான் நீங்கள் வழங்கி வருகின்றனர்.மேலும் தாமிரபரணி தண்ணீருடன் சேர்ந்து போர் தண்ணீரையும் கலந்து வழங்குவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது அதை அதிகாரிகள் கவனம் கொண்டு முறையான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் 60 ஆயிரம் லிட்டர் வழங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மத்தியில் பேசினார்.மேலும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் அதனால் தண்ணீர் சுத்தமாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com