Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் அரசு தமிழக முதல்வருக்குநன்றி தெரிவிக்கும் பயனாளிகள்.

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் அரசு தமிழக முதல்வருக்குநன்றி தெரிவிக்கும் பயனாளிகள்.

by mohan

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் அரசு தமிழக முதல்வருக்குநன்றி தெரிவிக்கும் பயனாளிகள்ராமநாதபுரம், நவ.19-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்காக 2021-22-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கய தொகை ரூ.813.63 கோடியானது இது வரை ஒதுக்கிய தொகைகளிலேயே அதிகமானது என்பதுடன் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டில் அரசு கொண்டுள்ள உறுதியை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதுடன், அவர்கள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒன்றிய அரசின் UDID SMART CARDவழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுநாள் வரை 9211 நபர்களுக்குUDID CARD வழங்கப்பட்டுள்ளளன. மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விஏஓக்கள் மூலம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுநாள் வரை 5,053 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை, 567 பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதித்தோருக்கான இல்லங்களில் தங்கியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ஆம் நிதி ஆண்டில் மனவளர்ச்சி குன்றியோர்3,569 பேர், கடுமையாக பாதிக்கப்பட்ட858 பேர், தசைச்சிதைவு நோய் பாதித்தோர்88 பேர், தொழுநோய் பாதித்தோர் 78, முதுகு தண்டுவடம் பாதித்தோர்30 பேர், அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் உதவியாளருக்கு உதவித்தொகை என 4,648 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் இது நாள் வரை (ஏப்.2021 முதல் அக்.2021 வரை ) ரூ.4.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு திட்டமாக மாவட்ட நிர்வாகம், அலிம்கோ நிறுவனம் இணைந்து மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர, சிறப்பு சக்கர நாற்காலிகள் நாற்காலி, நவீன செயற்கை கால், ஊன்றுகோல், மனவளர்ச்சி குன்றியோருக்கான கற்றல் உபகரணங்கள், பார்வையற்றோருக்கான உபகரணங்கள், கைபேசி, தொழுநோய் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உபகரணங்கள், கைபேசி, நவீன காதொலி கருவி, பேட்டரிகள், காலிப்பர் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் 1,189 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,13,69,540 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் உதவிகள் வேண்டி பெறப்பட்ட 43 மனுக்கள் மீது நேரடி கள ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை, நவீன காதொலி கருவி, சக்கர நாற்காலி, நவீன செயற்கை கால், தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, தேசிய அடையாள அட்டை போன்ற உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள்12 பேருக்கு வழங்கப்பட உள்ளன.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூன்று சக்கர சைக்கிள் பெற்ற பயனாளி கருணாநிதி தெரிவித்ததாவது :பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த நான் கால்கள் பாதித்த என்னிடம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இல்லை. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் உதவி கேட்டு விண்ணப்பித்தேன். அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, அதன் மூலம் மாத உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்து மூன்று சக்கர வண்டி இலவசமாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வக்கு நன்றி.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசி பெற்ற பயனாளி உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது : முதுகுளத்தூர் அருகே பிரபக்களுர் கிராம வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. மாத உதவித்தொகை பெற வேண்டி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மனு அளித்தேன். அதன் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாய் துறை மூலம் மாத உதவி தொகை பெற மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிலிருந்து தடையில்லா சான்று, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசி ஆகியவை வழங்கப்பட்டன. எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திறன் பேசி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி.மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை மேற்பார்வையிடும் பொருட்டு இத்துறையை அவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவ்வழியே செயல்படும் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இத்துறையை செயல்படுத்தி தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தடையின்றி கிடைப்பதால் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உறுதி செய்திடும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.சே.ரா.நவீன் பாண்டியன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராமநாதபுரம் மாவட்டம்ம.கயிலைச்செல்வம்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமநாதபுரம் மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!