இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல்

இராமநாதபுரம் ஒன்றியத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் உடன் கலந்துரையாடல் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் அ.அன்வர்ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் எம்.அசோக் குமார் ஏற்பாடு செய்திருந்தார். பாசறை மாவட்ட செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்.எஸ்.தர்வேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், மாணவரணி மாவட்ட செயலாளர் கே.செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.சரவணகுமார், போகலூர் ஒன்றிய செயலாளர் ஜி.நாகநாதன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உதுமான்அலி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவிகா, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சாத்தையா, தகவல் நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் செ.நாகராஜன் ராஜா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் விக்னேஷ்வரன், பசுபதி, மலர்மன்னன், முத்து முருகன், மணி, மோகன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்