Home செய்திகள் சிக்கலில் சிக்கி தவிக்கும் பழமை வாய்ந்த பாண்டியன் ஊரணி..

சிக்கலில் சிக்கி தவிக்கும் பழமை வாய்ந்த பாண்டியன் ஊரணி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள பாண்டியன் ஊரணி 26 ஏக்கர் கொள்ளளவு கொண்ட பொததுமக்களின் அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த வரலாற்று சிறப்புமிக்கதாகும். இராமநாதபுரம் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய பாசன கண்மாய் சிக்கல் பாசன கண்மாய்,  இதன் பாசனப் பகுதி பொட்டல் பச்சேரி தொட்டியபட்டி என 3500 ஏக்கர் பாசன பரப்புகளாகும். இதில்  விவசாய கண்மாய் சுமார் 9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.  இதற்கு நீர் வரும் வழித்தடங்கள் இரண்டு உள்ளன. அது  முதலாவதாக பார்த்திபனூர், பரமக்குடி, கடம், போடை வழியாக இரகுநாத காவேரியிலிருந்து ‘தண்ணீர் வரும். அடுத்தது இரண்டாவது கருமல், பெரிய இலை, ஆதங்கொத்தங்குடி, வல்லகுளம் வழியாக தண்ணீர் கண்மாயை வந்தடையும்.

பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை சேமித்து பத்திரமாக பயன்படுத்தி இரண்டு போகம் விவசாயம் செய்த பகுதி தற்போது ஒரு போகம் விவசாயம் செய்யக் கூட வழியில்லாமல் சீரழிந்து போய் உள்ளது. இந்த கண்மாய் முழுமைக்கும் சிறிய, பெரிய கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. கண்மாய் முழுவதும் மணல் மேடு போல் காட்சியளிக்கின்றன, கண்மாயின் நீர்நிலைப் பகுதிகளில் பல கிராம மக்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர்.

பொதுமக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி முதலாவது பணியாக கண்மாய் முழுமைக்கும் உள்ள சீமைக் கருவேல செடிகளை சுத்தம் செய்து அகற்றும் பணி நடந்து,  பாதிக்குமேல் முடிவுற்று ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை காட்டு கருவேல செடிகளை முழுமையாக அகற்றி விட்டனர். ஆனால் மீதம் உள்ள பகுதிகளில் 36 ஏக்கர் பரப்பில் உள்ள சீமைக் கருவேல செடிகளை சுத்தம் செய்ய வனத்துறை தடுக்கின்றனர். அதற்கு காரணம் இந்த மரங்களுக்கு இடையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர் மற்றும் சமூக விரோதச் செயலை செய்ய வனத் துறை துணை போகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசாங்கம் நல்ல தீர்வு காணுமா??

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!