61
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் ரோட்டில் “லேசர் பார்க் பேமிலி ரிசாட்” எனும் பொழுதுபோக்கு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ரிசாட்டின் நுழைவு வாயிலை டாக்டர் பாத்திமா சின்னதுரை திறந்து வைத்தார். பின்னர் உள்விளையாட்டு 1 வது அரங்கத்தை டாக்டர் சாதிக் அலி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து உள்விளையாட்டு இரண்டாவது அரங்கத்தை சித்தார்கோட்டை முஸ்லீம் ஜமாஅத் தர்ம பரிபாலன சபா தலைவர் அல்தாஃப் உசேன் திறந்து வைத்தார்.
இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ விளையாட்டு கருவிகள், இராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் வட இந்திய, தென் இந்திய சிறப்பு உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் களரி கலைக்குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இத்திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் லேசர் பார்க் நிறுவனர் ரஹ்மத்துல்லா வரவேற்றார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர்கள் சலீம், கஜினி முகமது ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.