Home செய்திகள்உலக செய்திகள் தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசு !! இராமநாதபுரத்தில் அதிமுக குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசு !! இராமநாதபுரத்தில் அதிமுக குற்றச்சாட்டு !!

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுத்தியதாகவும் விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட அதிமுக செயலாளர்  எம்.ஏ.முனியசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் மேற்கு ஒன்றிய  செயலாளரும்,  பட்டணம்காத்தான் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி. மருது பாண்டியன் துவக்க உரை நிகழ்த்தினார்.  மாநில மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார்  வரவேற்றார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,  அமைச்சர் உதயநிதி!  ஆகியோர் போதைப்பொருள் கடததல் காரர்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். டில்லியில் சிக்கிய போதைப்பொருள்  தமிழக போலீசார்  பிடித்திருக்கால் உணவுப்பொருள் எனக் கூறி மூடிமறைத்திருப்பர்கள் டில்லியில் பிடிபட்டதால் குட்டு வெளியானது என மாவட்ட கழக செயலாளர் எம்- ஏ. முனியசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கண்டனம் உரை நிகழ்த்தினார் . முன்னாள் அமைச்சர் கோஷங்களை படிக்க பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் உரக்க கோஷமிட்டனர். அதிமுக தொண்டர்கள்  கையில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என்னும் பதாகையுடன் திரளாக கூடியிருந்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் பால்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்  சுந்தரபாண்டியன் மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா சசிகுமார,  அவைத்தலைவர்  சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார,  முதுகுளத்தூர் முனியசாமி பாண்டியன, கடலாடி, காளிமுத்து கமுதி ராஜேந்திரன், அந்தேரனிராஜ சாயல்குடி, பிரவீன் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் , சிக்கல் முதுகுளத்தூர் நகர் செயலாளர் முத்துராமலிங்கம் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com