Home செய்திகள் இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம்..

இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நகராட்சி கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடைகளுக்கு அனுமதித்த அளவை விட பயணிகள் அமருமிடம், நடைபாதை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. இதனடிப்படையில் 18.10.2018 இல் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகளை 2 மணி நேரத்தில் அப்புறப்படுத்தி பயணிகள் சிரமம் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றிய சில நாட்களில் ஆக்கிரப்பு மீண்டும் தொடர்ந்தது. இதனால் அவதியடைந்த பயணிகள் மாவட்ட ஆட்சியகுக்கு மீண்டும் புகார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று காலை களமிறங்கினார். ஆய்வின் போது ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற அறிவுறுத்தினார். இதன்படி நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கடைகளில் இருந்த பழங்கள், எண்ணெய் பலகாரம், பேக்கரி பண்டங்களை பறிமுதல் செய்தனர். வீணாகும் பழங்கள், எண்ணெய் பலகாரங்கள் ஆட்சியர் அறிவுறுத்தல் படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் 10 பேருக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதிக்க ப்பட்டது. மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!