Home செய்திகள் பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாநில அரசின் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 3 நாள் நிகழ்வுகளில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள்நிர்வாகிகள் (5 பேருக்கு மிகாமல்) பங்கேற்க கலெக்டரிடம் அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருவோர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்துசெல்லவேண்டும். ராமநாதபுரம் ஆட்சியரால் வெளியிடப்படும்நேரப்பட்டியல் படி உரிய நேரத்தில் மரியாதை செலுத்தவும், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசின் அனைத்து வழிகாட்டல் நெறிமுறைளை பின்பற்றி முகக்கவசம், கையுறை அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல்,சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றவேண்டும். அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருவோர் வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கியபேனர்களை கட்டி வரவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. வாகனங்களில்வரும்பொழுது, வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களைநிறுத்தாமல் ஒத்துழைக்க வேண்டும். ஜோதி, முளைப்பாரி, சிலம்பம்,பால்குடம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட186 வழித்தடங்களில் தேவர் நினைவிடத்திற்குவாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 148பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் 900இரும்பு உலோக தடுப்புகள் நிலை நிறுத்தப்பட்டு, 8,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் வாடகை வாகனங்கள், அனுமதி பெறாமல் பசும்பொன் வரும் வாகனங்களை சோதனை செய்துகட்டுப்படுத்த, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 8 இணையவழிசோதனை சாவடிகள் உட்பட தீவிர சோதனை சாவடிகள் 39 அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். காவல் சோதனைச் சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்புகேமராக்கள் பொருத்தப்பட்டள்ளன. கமுதி தனி ஆயுதப்படை சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன், கமுதி பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 200இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில்ஆளில்லா பறக்கும் கேமராக்ககள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டவாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. விதி மீறலில் ஈடுபடுவோர், வாகனங்களை படம் பிடிக்க 80 கையடக்க வீடியோ கேமராக்கள்பயன்படுத்தப்படவுள்ளது. 10 இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், 8 இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வாகனங்கள், அவசர கால சூழலைஎதிர்கொள்ள 16 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 18 இடங்களில்தீயணைப்பு வாகனங்கள், போலீசார் நலனை கருத்தில் கொண்டு 10 நடமாடும் கழிப்பறை வசதிகளுடன்கூடிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி மேற்பார்வையில், தென் மண்டல ஐஜி தலைமையில் 4 டிஐஜி., கள், 19 எஸ்பிக்கள், 28 கூடுதல் எஸ்பி., கள் 70 உதவி மற்றும் டிஎஸ்பி., கள் மற்றும் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் என 8,500 பேர் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட உள்ளனர். 53 வழித்தடங்களில் 4 சக்கர வாகனங்களிலும், 57வழித்தடங்களில் இரண்டு சக்கர வாகனங்களிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வட்டாட்சியர் அந்தஸ்தில் 9 நிர்வாகத் துறை நடுவர்கள், துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் 71 செயல்துறை நடுவர்கள் வருவாய்த்துறைசார்பில் நியமிக்கப்பட்டுள்னர். பிரச்னைக்குரியவ ர்களாக கண்டறியப்பட்ட 350 பேர் மீது பிரிவு 107, 110 சட்ட விதிகளின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு ஆட்சியர் அனுமதி பெற்று வருவோர் மாவட்ட நிர்வாகம், போலீசாரின் வேண்டுகோள் படி சட்டம், ஒழுங்கை பேணி காக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com