பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு தினம் காவல் துறை கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.9.2021 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்ட ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியும் அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. இ. கார்த்திக், இகாப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக, மத்திய மாநில அரவுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வைகயில் 09.9.2021 முதல் இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியரால் குவிமுச 144-ன்படி தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது., பொதுமக்களின் நலன் கருதியும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதாலும், 11.9.2021 அன்று பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் (5 நபர்களுக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியை பெற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும்.வாடகை வாகனங்கள் , திறந்த வெளி வாகனங்கள் , டாடா ஏஸ், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை.வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் கண்டிப்பாக மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. 7. திறந்தநிலையில் உள்ள வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது.வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.காவல்துறையால் வரையறுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்றுவரவேண்டும். எக்காரணம் கொண்டும் தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லக்கூடாது.வாகனங்களில் வரும்போது கோசங்கள் எழுப்பாமலும், பிரச்சனைகளை தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர் ஏதும் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்து இடையூறு செய்யும்வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது.ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடமணிந்து வருதல் மற்றும் ஊர்வலமாக வருதல் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள்/பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரியாதை செலுத்த வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாக அறியப்பட்டுள்ளன. அவ்வழித்தடங்களில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டள்ளன. மேலும் 123 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாவும் அறியப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 39 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டள்ளன. மேலும் பரமக்குடி நகரில் பாதுகாப்பு பணியினை கண்காணிக்கவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பரமக்குடி நகர் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாண்டு பாதுகாப்பு பணிக்கு என திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி உட்கோட்ட பகுதிகளை உள்ளடக்கி 8 செக்டார்களாகப் பிரிக்கப்பட்டும், முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, திருவாடானை ராமநாதபுரம் மற்றும் ராமேஸவரம் உட்கோட்டங்கள் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டும், போக்குவரத்து பரிவு தனி செக்டாராகப் பிரிக்கப்பட்டு 17 காவல் கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 60 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள், 300 சார்பு ஆய்வாளர்கள், 4000 தாலுகா காவல் ஆளிநர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 600 காவலர்கள், 250 போக்குவரத்துக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 30 வழித்தடங்களில் நான்கு சக்கர வாகனத்திலும், 57 வழித்தடங்களில் இரண்டு சக்கர வாகனத்திலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடஉள்ளனர்.மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வட்டாச்சியர் பதவியில் 9 நிர்வாகத்துறை நடுவர்களும், துணை வட்டாச்சியர் பதவியில் 56 செயல்துறை நடுவர்களும் வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளர். வெளி மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பரமக்குடி நகர் பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அரசு மற்றும் தனியார் பயணிகள் பேருந்துகளை ராமநாதபுரம், ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகணி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்க வேண்டும். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இதே மார்க்கத்தில் இயக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பரமக்குடிக்கு வரும் நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், வழக்கு பதிவு செய்து வானகங்களும் பறிமுதல் செய்யப்படும். மேற்படி உத்தரவு பிரகாரம் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்இ.கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..