Home செய்திகள் இராமநாதபுரத்தில் ரூ.85 ஆயிரம் மதிப்பில்கல்வி, மருத்துவம், சிறு தொழில் உதவி வழங்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் ரூ.85 ஆயிரம் மதிப்பில்கல்வி, மருத்துவம், சிறு தொழில் உதவி வழங்கப்பட்டது.

by mohan

ராமநாதபுரம் மத்திய மாவட்ட மனிதநேய வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மமக மனிதநேய வணிகர் சங்க மத்திய மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமை வகித்தார்.கல்வி, மருத்துவம், சிறு தொழில்உதவிகள் வழங்கப்பட்டதுராமநாதபுரம் தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி கட்டணம், இருவருக்கு தலா ரூ.10 ஆயிரம், இருவருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் சிறுதொழில் உதவி,காரைக்காலை சேர்ந்த அபுபக்கருக்கு குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம், மூன்று பேருக்கு ரூ.21,500 மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டது.மமக மத்திய மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான், தமுமுக மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக், துணை செயலாளர் யாசர் அரபாத், நகர் தமுமுக, மமக தலைவர் அப்துல் ரஹீம், நகர் தமுமுக செயலாளர் சுலைமான், நகர் மமக செயலாளர் அமீன், நகர் பொருளாளர் முஹமது தமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!