மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் காங்., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாரிராஜன் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் கோபி வரவேற்றார்.

மாவட்ட துணை தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர மணிகண்டன், மாவட்ட மகளிரணி தலைவர் பெமிலா, மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் சரவண காந்தி, மாநில மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, மண்டபம் வட்டாரத் தலைவர் விஜயரூபன், திருப்புல்லாணி வட்டாரத் தலைவர் சேதுபாண்டியன், ராமநாதபுரம் வட்டாரத் தலைவர் கோபால், மாவட்ட மீனவரணி தலைவர் சகாயராஜ், மாவட்ட மீனவ மகளிரணி தலைவர் தமிழரசி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி பாத யாத்திரைக்கு முயன்ற மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா உள்பட 70 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்,