Home செய்திகள் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் மினி கிளினிக் திறப்பு: ஆட்சித் தலைவர் பார்வை

கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் மினி கிளினிக் திறப்பு: ஆட்சித் தலைவர் பார்வை

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் மாரந்தை, பொதிகுளம் கிராமங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து குறை சார்பில்மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதலமைச்சரின்அம்மா மினி கிளினிக் செயல்பாட்டை துவக்கி வைத்தார்.முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ்இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கள் 39 ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன. கடலாடி ஊராட்சி ஒன்றியம் மாரந்தை மற்றும்பொதிகுளம் கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் துவக்கி வைத்துபார்வையிட்டார். இதன்மூலம் மாவட்டத்தில் தற்போது வரை 33 அம்மா மினி கிளினிக்கள்செயல்படுத்தப்பட்டுள்ளன. பரமக்குடி பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்பி.இந்திரா, வட்டார மருத்துவஅலுவலர் மரு.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புக்கண்ணன், பாண்டி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முனியசாமி பாண்டியன்உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com