ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கைரூ 71 லட்சம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட பிப்.1 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்தது.தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தீர்த்தமாடி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கிழக்கு திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் திறந்து கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர் இதில் ரொக்கம் ரூ.71.10 லட்சம், தங்கம் 77.900 கிராம், வெள்ளி ஒரு கிலோ 65 கிராம் கிடைத்தது. பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் தங்கையா, தக்கார் பிரதிநிதி வீரசேகரன் உட்பட கோயில் ஊழியர்கள் பங்கேற்றன