Home செய்திகள் கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்துகஅகில இந்திய கட்டுநர் சங்கம் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்துகஅகில இந்திய கட்டுநர் சங்கம் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

by mohan

சிமின்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அகில இந்திய கட்டுநர் சங்கம் ராமநாதபுரம் மையம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மையம்தலைவர் எம்.ரத்னவேல் தலைமை வகித்தார். செயலாளர் கே.செந்தில் குமார், பொருளாளர் பி.குமரன் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய கட்டுநர் சங்கம் ராமநாதபுரம் மையம்தலைவர் எம்.ரத்னவேல், செயலாளர் கே.செந்தில் குமார் கூறுகையில்,அபராதம் விதித்த பிறகும் கூட சிமென்ட் உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காமல் மேலும் உயர்த்தினர். மூலப்பொருட்களின் விலை மாற்றமும் இல்லாத நிலையில் ஸ்டீல் உற்பத்தியாளர்களும் விலை உயர்த்தினர். குறைந்தளவு உற்பத்தி செய்து சந்தையில் சிமென்ட் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை தங்கள் கட்டுக்குள் வைக்கின்றனர். செயற்கை பற்றாக்குறையை பயன்படுத்துவதால் சந்தை ஆதிக்க போக்குகளை கட்டுப்படுத்தவும்,சிமென்ட் விலையை கட்டுக்குள் வைக்கவும் அரசு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ வேண்டும்.1992-ல் இந்திய பாதுகாப்பு பரிவர்த்தனை வாரியம்,1997ல் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், 1990-ல் இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், 2016 ல் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் போல் சிமென்ட் விலை கட்டுப்பாடு ஒழுங்கு முறை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.அரசின் விரைவான, உடனடி நடவடிக்கை 60-மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதுடன் , மலிவு விலை வீட்டுத் திட்டத்தை உள்ளடக்கிய கட்டுமானத் துறையை சரிவில் இருந்து காப்பாற்றும். ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும் வரை சிமென்ட் , ஸ்டீல் உள்பட கட்டுமான இதர பொருட்களின் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் என்றனர். இன்ஜினியர்கள் ராம்குமார், வீரபூபதி, மூர்த்தி, ஆறுமுகம், சண்முகவேலு, ஆனந்தன், நிஜாமுதீன், ரவி சாலமோன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com