
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டில்லியில் கடந்த 56 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் ராமநாதபுரத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் பரத்கத்துல்லா தலைமை வகித்தார். அண்ணா சிலை முன் தொடங்கிய பேரணி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் வரை சென்ற பேரணியில் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்றாஹீம், ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ஜெமீல், திருப்புல்லாணி வட்டார செயலர் பைரோஸ் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.