Home செய்திகள் இராமநாதபுரத்தில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு பேரணி.

இராமநாதபுரத்தில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு பேரணி.

by mohan

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத் துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு அரசு, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நடப்பாண்டில், 18.01.2021 முதல் 17.02.2021 வரை ஒரு மாத காலத்திற்கு 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவாக கடைபிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கினார்.சாலை பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம். 18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்ற பின் வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையுடன் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்த வேண்டும். இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிதல், 4 சக்கர வாகனங்கள் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிதல் போன்ற பழக்கங்களை முறையே கடைபிடிக்க வேண்டும்.வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்பு போன்ற வருந்ததக்க சம்பவங்கள் நிகழ்கின்றன. 2020 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1022 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 206 விபத்துகளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். 816 விபத்துகளில் 1,113 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளை தவிர்த்து 100 சதவீதம் சாலை விபத்துகள் இல்லாத மாவட்டம் என்ற நிலையினை அடைந்திடும் வகையில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் சாலை விதிமுறைகளை முறையே பின்பற்றி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.சேக் முகமது, அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (காரைக்குடி) கே.ஆதப்பன், கோட்ட மேலாளர் கே.நலங்கிள்ளி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆர்.இளங்கோ, வி.ராஜ்குமார் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் தெய்வேந்திரன், தனபால், ரவி உட்படி அரசு அலுவலர்கள் , கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com