Home செய்திகள் மீனவம் காப்போம்.. சுனாமி நினைவுதினம்

மீனவம் காப்போம்.. சுனாமி நினைவுதினம்

by mohan

மீனவம் காப்போம் இயக்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை இராமநாதபுரம் சார்பாக சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்த மீனவர்களின் 16ம்ஆண்டு நினைவஞ்சலி உப்பூர் அடுத்த மோர்பண்னை மீனவ கிராமத்தில் நடைபெற்றது.2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலையில்  கடற்கரையோரம் குடியிருந்த மீனவர் பலர் இறந்த சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிய நிலையில், உயிர்நீத்த மீனவர்களின் நினைவாக கடலில் பால் மற்றும் மலர்கள் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மீனவம் காப்போம் தலைமை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் பிரசன்னா, பாம்பன் இராமு, ஜோதி, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் வேலாயுதம், செயலாளர் மெய்யழகன், கிராம தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் கமலகண்ணி பால்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி துரைபாலன் உட்பட 100ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com