Home செய்திகள் உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசனம் கட்டுப்பாடுகள் விதிப்பு

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசனம் கட்டுப்பாடுகள் விதிப்பு

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ள மங்களநாத சுவாமி கோயில் தனி சன்னதியில் அமைந்துள்ள மரகத நடராஜருக்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா (திருவாதிரை) வரும் 29.12.2020-ம் தேதி மற்றும் 30.12.2020 ஆம் தேதி திருவிவிழா நடைபெறுவது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிடும் செய்திக்குறிப்பு :- கொரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.2020 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள 29.12.2020 மற்றும் 30.12.2020 ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கை பாதிக்கப்படாத வகையிலும் அதே சமயம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திடவும் தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு கட்டுப்பாடுகள் 31.12.2020-ம் தேதி வரை அமலில் உள்ளதாலும், நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழாவினை பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், லண்டனில் மீண்டும் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் திருவிழா சமயத்தில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், திருவிழா நிகழ்ச்சியில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பிடப்பட்ட தரிசன நேரங்களில், கோயிலினுள் உள்ளூர் பக்தர்கள் 200 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியின்றி கூடுவதை தவிர்க்க வேண்டும், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளின்படி உள்ளூர் பக்தர்களிடம் இருந்து பூஜைத்தட்டு, நைவேத்தியம் பெறப்பட்டு சடங்குகள் மேற்கொள்வதற்கும், கோயிலினுள் அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆருத்ரா தரிசன விழாவில் 10 வயதுக்கு கீழான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கும் கூடுதலான மூத்த குடிமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும், கோயில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து மகா அபிஷேகம் நடைபெறும் இடத்தின் அளவிற்கேற்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, சீரான இடைவெளியில் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாக உத்தரவுகளை கடைபிடித்து, காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கேட்டுக் கொண்டுள்ளார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com