
ராமநாதபுரம் சிவஞானபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிவபாலா, 35. கடந்த 2006ல் காதல் திருமணம் நடந்த இவர்களுக்கு 2 பெண் குழந்தை, வயது ஆண் குழந்தை உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக சிவபாலா வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இடையே கடந்த ஓராண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த இருவரும் விசாரணை முடித்து வீடு திரும்பினர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சிவபாலா நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபாலாவை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சிவபாலா உயிரிழந்தார். காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கேணிக்கரை போலீசில் சரணடைந்த சரவணனை போலீசார் கைது தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.