முந்தைய ஆட்சியர் – முதல்வருடன் சந்திப்பு

இராமநாதபுரம் ஆட்சியராக 22.8.2018 முதல் 12.11.2020 வரை பணியாற்றிய கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், 15.11.2020 அன்று ஆட்சியர் பொறுப்புகளை கொ.வீரராகவ ராவ் ஒப்படைத்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக பொறுப்பேற்ற கொ.வீரராகவ ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் இன்று (18.11.2020) சந்தித்து வாழ்த்து பெற்றார்.