குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.நம் உரிமை அனைத்து வாகண ஓட்டுநர்கள் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது மரக்கன்றுகளை வழங்கினார்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் அல்மஜுனாஸ் சாகுல் செய்திருந்தார்.இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஹபீப், கபார்கான்,நூருல் அமீன் , ஆசிரியர் பாதுஷா, ரிஸ்வான், முகம்மது மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.