பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்

வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று கடந்த சில நாட்களாக வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.இதன் படி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால் பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஐயாயிரத்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் நங்குகூரமிட்டு 4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..