
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர்
அமைப்பாளர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார்.பாலா வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த், இணை செயலாளர் செந்தில் வேல், மண்டபம் ஒன்றிய செயலாளர் ரஜினி, பரமக்குடி ஒன்றிய செயலர் கே.ஜி.கருப்பையா, ராமேஸ்வரம் நகர் செயலாளர் முருகன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் பாலன், பரமக்குடி நெசவாளர் அணி சுப்ரமணியன், மண்டபம் நகர் நிர்வாகி எஸ்.தவம் ஆகியோர் பேசினர். மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கோகிலா, மண்டபம் நகர் நிர்வாகிகள் டி.சூசை காந்த், ஹரிகரன், எஸ்.களஞ்சிய ராஜா, சகுபர் அலி டி.கணேசன், ராஜேந்திரன், பாபு, செல்வம், லைலத், முருகானந்தம், மண்டபம் முகாம் மு.ரகுநாதன், ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தம்பிதுரை, முகவை பாலா, இணை செயலர் ராஜேஷ் கண்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 549 மதிப்பெண் எடுத்த முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவி, தர்கா வலசை மீனவர் நாகராஜன்- சரவஸ்வதி தம்பதி மகள் என்.தேன்மொழிக்கு (மதுரை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி பிகாம் முதலாமாண்டு) கேடயம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.