ராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம் ரூ.167.61 கோடி நலத்திட்ட உதவி தமிழக முதல்வர் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி ஆய்வு கூட்டத்திற்கு இன்று (22.9.2020) வந்த

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, காதி மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் உடன் வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர், தென் மண்டல ஐஜி., முருகன், டிஐஜி., என்.எம்.மயில் வாகணன், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்பி., அன்வர்ராஜா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ரூ.70,54,88,000 மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.ரூ.24,24,68,000 மதிப்பில் 844 முடிவுற்ற 844 திட்ட பணிகளை திறந்து வைத்தார். 15,605 பயனாளிகளுக்கு ரூ.72,81,84777 என ரூ.167,61,40,777 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.இந்திய.சீன லடாக் எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இடையே ஜூன் 15 ல் நடந்த தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் கா.பழனி மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி ஆணை வழங்கினார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..