ராமேஸ்வரத்தில் பாரதி நினைவு தினம்.மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பாரதி நினைவு தினத்தில்2019 – 2020 கல்வி ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் ராமேஸ்வரம் தீவு அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாரதி விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.மிருத்துன்தலைமை வகித்தார்.ஜெயன்முன்னிலை வகித்தார். பி.ஜோதிபாசுவரவேற்றார். முகவை முனீஸ், சி.ஆர்.செந்தில்வேல் ஆகியோர் பேசினர். மாநில நல்லாசிரியர்என்.ஜெயகாந்தன், தமிழாசிரியர்கள் கு.செந்தில்வேல், சூ.மா.பெனடிக்ட், உடற்கல்வி ஆசிரியைஜி.கோபிலட்சுமி, ராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற செயலர்இரா.மோகன், சமுக ஆர்வலரகள் சே.முருகானந்தம்வி.கே.ஆரோக்கியநாதன், தமிழ் மருத்துவர்ஆ.நல்லதம்பி,நிர்வாகிகள்சி.திருவாசகம், இரா.கண்ணன், ஜி.பாண்டி, பி.ஜீவானந்தம், ஏ.கே.முனீஸ்வரன், என்.நாகராஜன்,சி.இன்னாசிஎம்.பிச்சை, எஸ்.ராஜா, எம்.நம்பு, கே.காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.என்.ஜே.மோகன்தாஸ்நன்றி கூறினார்