மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாளான இன்று(11.09.2020) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வராத அரசியல் கட்சிகள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி விமான நிலைய முக்கிய சாலையில் உள்ளது மகாகவி பாரதியார் சிலை.தேசியக் கவிஞரான மகாகவி பாரதியாரின் நூறாவது நினைவு நாளான செப்டம்பர் 11 இன்றுஎந்த அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் கேட்பாரற்றுக் கிடந்தது.சாதிய , சமூக . அரசியல் கட்சித் தலைவர்கனின் நினைவு நாளான அன்று அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் போட்டி போட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய பாரதியாரின் உருவச்சிலைக்கு எந்த அரசியல் கட்சியுமே வராதது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..