பரமக்குடிஇமானுவேல் நினைவு தினம் அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர் மலரஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழக துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் (வருவாய் துறை) ராஜலட்சுமி (ஆதிதிராவிடர் நலத்துறை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), மாணிக்கம் (சோழவந்தான்), அதிமுக., மாவட்ட செயலர் எம்.ஏ. முனியசாமி, சிறுபான்மை பிரிவு மாநில செயலர் அ.அன்வர் ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி,தமிழரசி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவீரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்எஸ்.கே.பவானி ராஜேந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.முருகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ஏ.என். ரகு உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டியலின அணி தலைவர் செல்வப்பெருந்தகை, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி, மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவண காந்தி, பொதுச்செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தேமுதிக சார்பில் மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமமுக சார்பில் ராமநாதபுரம் மண்டல பொறுப்பாளர் கே.கே. உமா தேவன் (முன்னாள் எம்எல்ஏ), மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எஸ். முத்தையா (முன்னாள் எம்எல்ஏ) , மானாமதுரை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, மாநில இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் ஜி.முனியசாமி, போகலூர் ஒன்றிய செயலாளர் ராஜாராம் பாண்டியன், பரமக்குடி நகர் செயலாளர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..