ராமநாதபுரம், ராமேஸ்வரம், சாயல்குடியில் வ.உ.சியின் 149 வது பிறந்த நாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. யின் 149 வது பிறந்த நாளையொட்டி வ.உ.சி., உருவப் படத்திற்குவெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வெள்ளாளர் முன்னேற்ற கழகம்மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வசித்தார். மாவட்ட செயலர் வன்னி பிரபு, மாவட்ட பொருளாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

. வ.உ.சி.உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், வெள்ளாளர் சமுதாய மக்கள் கலந்துகொண்டனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்பி., எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், நகர் செயலர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவிரன், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் ஏ.சி. ஜீவானந்தம் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சாயல்குடி ஒன்றிய அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் வ.உ.சி பிறந்த நாள் விழா நடந்தது.சாயல்குடி அருகே டி.எம். கோட்டையில் சாயல்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், ஒன்றிய செயலர் வி.கே.முனீஸ்வரன் தலைமையில் வ உ சி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. டி.எம் கோட்டை மறவர் சங்க நிர்வாகிகள் கே.அன்பழகன், காளிமுத்து, முருகன், எம்.சங்கர் எம். முத்துராமலிங்கம் எஸ்.சக்திவேல், மாரிமுத்து, ஆர். காளிமுத்து நாகநாதன், பி.மணிமாறன் கலந்து கொண்டனர்.ஒன்றிய நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் திருக்கண்ணன், எம்.கருப்பசாமி எம்.கார்த்திக், டி.எம் கோட்டை வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் ராசி பிள்ளை, தெய்வேந்திரன், சுப்ரமணியன், சேகர், அப்பாசாமி மாணிக்கம், அருணாசலம், தங்கப்பாண்டி , வ உ சி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக அருண்குமார், அரவிந்த், சுந்தர் மற்றும் இளைஞர்கள் இவ் விழா ஏற்பாடு செய்தனர்.ராமேஸ்வரம் தீவு வெள்ளாளர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் அனைத்து கட்சி, அனைத்து சமுதாயத்தினர் ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றி வ.உ. சி. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..