
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, சேதுக்கரை பகுதிகளில் , சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.6 லட்சம் மதிப்பில் இரண்டு நிழற்குடைள் கட்டப்பட்டன. இவ்விரண்டு நிழற்குடைகளை பயணிகள் பயன்பாட்டிற்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எம்.மணிகண்டன் திறந்து வைத்தார்.
இவ்விரு நிகழ்விலும் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக., செயலாளர் ப.கருப்பையா, ஒன்றிய அவைத்தலைவர் உடையத்தேவன், ஒன்றிய துணை செயலர் பாக்கியநாதன், ராமநாதபுரம் தஞ்சி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, சசிக்குமார், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர்கள் கமலா கருப்பையா, ரஞ்சனி செல்லத்துரை, பிரேமா சரவணன், முனியாயி செவத்தான், சுமதி ஜெயக்குமார், நாகநாதன், அம்மா பேரவை ஒன்றிய துணை செயலர் சண்முகம், அதிமுக., மகளிரணி ஒன்றிய செயலர் மலர்க்கொடி, திருப்புல்லாணி கிளை செயலர் பால்ராஜ், சேதுக்கரை ஊராட்சி செயலர் செய்யது இப்ராஹீம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலா ஸ்ரீபாலாஜி மற்றும் பழநி முருகன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சேதுக்கரை அருகே அம்மா கோவில் பகுதியில் உள்ள கிணற்று குடிநீர் உவர் நீராக மாறியதையடுத்து புதிய கிணறு அமைத்து தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டனிடம், சேதுக்கரை கிராம நிர்வாகி விஸ்வநாதன் கோரிக்கை மனு அளித்தார்.
You must be logged in to post a comment.