நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐஎன்ஏ., பாலசேனை வீராங்கனை காலமானார்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மேலபண்ணைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திமதி பாய். இவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ.,வின் பாலசேனையில் காந்திமதி பாய் 12 வயதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய இவர், சொந்த ஊரான மேலபண்ணைகுளத்தில் கணவர் ராமசாமி தேவருடன் வசித்து வந்தார். ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். வயது முதிர்வால் 101 வயதில் நேற்று (15.7.2020) காலமான இவரது உடல் அடக்கம் மேலபண்ணைகுளத்தில் நடைபெற்றது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..