Home செய்திகள் இராமநாதபுரத்தில் மகளிர் தின விழா. பெண்கள் சுதந்திர மராத்தான் ஓட்டம் 1,200 பேர் பங்கேற்பு

இராமநாதபுரத்தில் மகளிர் தின விழா. பெண்கள் சுதந்திர மராத்தான் ஓட்டம் 1,200 பேர் பங்கேற்பு

by mohan

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்மையை போற்றும் வகையில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுக்கும் நோக்கில் சுதந்திர ஓட்டம் எனும் மராத்தான் போட்டி இராமநாதபுரத்தில் இன்று (மார்ச் 8) காலை நடந்தது. இராமநாதபுரம் அருகே பேராவூர் செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்த 5 கி.மீ., தூர மராத்தான் போட்டியில் 1, 200 க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். 5 கி.மீ., தூரத்தை 25 நிமிடங்கள் 48 நொடிகளில் கடந்த பரமக்குடி எம்.சுமித்ரா முதலிடம் பிடித்தார்.

29.49 நிமிடங்களில் கடந்த செய்யது அம்மாள் மெட்ரிக். பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி டி.அனித்ரா இரண்டாம் இடம், 30.12 நிமிடங்களில் கடந்த ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மாணவி ஏ.ஸ்னேகா மூன்றாம் இடம், 30.18 நிமிடங்களில் கடந்த சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.பவித்ரா நான்காம் இடம், 33.18 நிமிடங்களில் கடந்த அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கே.மௌனிகா ஐந்தாம் இடம் பிடித்தார். சிறந்த வெற்றியாளராக சுஜிதா தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எம். அல்லி, செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, பிராந்திய ரோட்டரி பவுண்டேஷன் உதவி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, டாக்டர் மதுரம் அரவிந்தராஜ், ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஜெ.தினேஷ் பாபு, ரோட்டரி நிர்வாகி சண்முக ராஜேஸ்வரன்,நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக். பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, பள்ளி முதல்வர்கள் ராஜமுத்து, ஜெயலட்சுமி, டாக்டர் ரம்யா தினேஷ், ஆங்கில ஆசிரியை நாகலட்சுமி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் நாகராஜன், டாக்டர் பாத்திமா சானாஷ், இன்னர்வீல் சங்க மாவட்ட சேர்மன் லெட்சுமிவர்த்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவனை டாக்டர் சானாஷ் பாத்திமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!