Home செய்திகள் கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. பி.எஸ்சி., கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.ஆசினா பர்வின் கிராத் ஓதினார். கல்லூரி முதல்வர் இ.ரஜபுதீன் தலைமை வகித்தார். பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவி ஏ.மஞ்சுளா, பிஎஸ்சி., மூன்றாம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப மாணவியர் ஏ. தேவதர்ஷினி, கே. நேத்ரா நிவாஷ்னி ஆகியோர் வரவேற்பு நடனமாடினர்.பி.ஏ., ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவி ஜி.ஹரிஷ்மா வரவேற்றார். கல்லூரி பி.சிஏ துறைத் தலைவர் எம்.மதீனா, பிஸியோதெரபி நிபுணர் டாக்டர் ஆண்ட்ரினா ஜெமிமா சிறப்புரை ஆற்றினர்.ஆபரணங்கள் உருவாக்குதல் , கழிவு பொருட்களில் இருந்து கலை பொருட்கள் உருவாக்கம், மெஹந்தி வடிவாக்கம், மணப்பெண் அலங்காரப் பொருட்கள் உருவாக்கம், ரங்கோலி வரைதல், காய்கறிகளை அழகுபடுத்தல், அறிவு புதிர் போட்டி, ஜோடி நடனம், பேஷன் அணி வகுப்பு, குழு நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியைகள் நிறைமதி , ரேகா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.பி.காம்(சி.ஏ) மூன்றாம்  ஆண்டு மாணவி எம்.நந்தினி நன்றி கூறினார். கல்லூர் தலைவர் மற்றும் தாளாளர் எஸ் எம்.முஹமது யூசுப், செயலர் எஸ்.எம்.எச்.ஷர்மிளா ஆகியோர் ஆலோசனையின்படிகல்லூரி தகவல் தொழில்நுட்ப துறைத்தலைவர் ஜெ.மலர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை உதவி பேராசிரியை கே.பிரபாவதி, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை உதவி பேராசிரியை எம்.ஜமிலா பேகம், பட்டய கணக்கு வணிகவியல் துறை உதவி பேராசிரியை எஸ்.முனிய சத்யா, நுண் உயிரியல் துறை பேராசிரியர் ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!