Home செய்திகள் ராமநாதபுரம் அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடக்கம்

ராமநாதபுரம் அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடக்கம்

by mohan

கீழடி அகழாய்வுக்குப்பின் கல்லூரி மாணவர்கள் இடையே தொல்லியல், பண்பாடு, தமிழர் நாகரிகத்தை அறிவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் ஆர்வத்தை நிறைவேற்ற தமிழக வரலாறு, கலை, பண்பாட்டை மாணவர்கள் தெரிந்து கொள்ளவும் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் க.மகுதம்மாள் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் “ராமநாதபுரம் மாவட்டத்தில் பல தொல்லியல் தடயங்கள் சிதைந்து வருகின்றன. 2,600 ஆண்டுகள் பழமையான கீழடியை விட அகழாய்வில் அதிக பொருட்கள் கிடைத்த அழகன்குளம், தேரிருவேலி ஆகியவை ரோமானியருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பன்னாட்டு நகரங்கள் ஆகும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று அவற்றின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டால் தான் அவற்றை பாதுகாக்கவேண்டும் என்றார். உடற்கல்வி இயக்குநர் சோ.மணிமுத்து வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் மெ.செந்தாமரை முன்னிலை வகித்தார். தொல்லியல் மன்றமும் ராமநாதபுரம் மாவட்டச் சிறப்புகள் குறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான வே,ராஜகுரு,சங்ககாலக் கல்வெட்டுகள் குறித்து தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனிபேசினர். தொல்லியல் மன்றச் செயலாளர் ர.அதிசயம் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!