ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது படகுகளை பறிமுதல் செய்வது படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பது இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இரண்டு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கும் இலங்கை அரசை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருப்பது : தமிழக மீனவர்களுக்கு உயிருக்கும் உடைமைகளுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பில்லை என்கின்ற மிக மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் இன்றைக்கு பிரதமர் வேட்பாளராக இருக்கின்ற நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் மீனவர்களுக்கு பாதுகாப்பளிப்பேன் என்கின்ற வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இந்த பத்தாண்டு காலத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து இருப்பதாகவும் பகைநாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானில் கூட இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கின்றனர். ஆனால் இலங்கை கடற்படை தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு தொல்லை அளிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை சிறை தண்டனை இலங்கை அரசு வழங்கி சிறையில் அடைத்துள்ளதாகவும் 143 தமிழக படகுகளை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்து வைத்துள்ளது .ஒவ்வொரு படமும் 40 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான படகுகள் ஆகும் அதனை மீட்பதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை கடந்த நவம்பர் மாதம் ராமேஸ்வரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்த பொழுது அதற்கு முதல் நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் அப்போது மீனவர்கள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்தனர் உடனடியாக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் . அப்படி விடுவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 143 தமிழக படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசாங்கமும் பெருமளவு உதவி செய்து அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எல்லா உதவிகளையும் செய்தனர் . இப்படி நல்ல அடிப்படையில் உதவி செய்த சூழ்நிலையில் மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் நீடித்து வருவதாகவும் தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் தானா அல்லது அன்னியர்களாக என்ற ஐயம் உள்ளதாகவும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் பொழுது நடவடிக்கை எடுக்காமல் தமிழக மக்களை இந்திய குடிமக்களாக ஒன்றிய அரசு கருதவில்லையா என்ற கேள்வி எழுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார் .அதன் பின் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குஇந்தியா முழுவதும் போதைப்பொருள் இறக்குமதி செய்யும் மையமாக இருப்பது குஜராத் எனவும் அங்கிருந்து தான் போதைப் பொருள்கள் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அதில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளதாகவும் போதைப் புழக்கத்திற்கு முக்கியமாக மாநிலமாக திகழ்வது குஜராத் மாநிலமாகவும் குஜராத் மாநில துறைமுகத்திற்கு யார் அதிபர் என அனைவருக்கும் தெரியும் அதை கட்டுப்படுத்தினாலே தமிழ்நாடு முதல் இந்தியா முழுவதும் போதைப்பொருள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி தெரிவித்துள்ளார்.
54
You must be logged in to post a comment.