Home செய்திகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் தீர்த்தம் சேகரிக்கும் நிகழ்ச்சி.இஸ்லாமிய சகோதரர்கள் தொட்டு வணங்கி வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் தீர்த்தம் சேகரிக்கும் நிகழ்ச்சி.இஸ்லாமிய சகோதரர்கள் தொட்டு வணங்கி வாழ்த்து

by mohan

வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக காசி விஸ்வநாதர் திருத்தத்தை எடுக்க பாஜகவினருக்கு அறநிலையத்துறை மற்றும் காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.அறநிலையத்துறை அனுமதி வழங்கிய நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.மலை மேல் உள்ள சிக்கந்தர் சமாதி வழியாக செல்வதாக கூறியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் சார் தடுத்து நிறுத்தினர் .இதனைத் தொடர்ந்து பாஜகவினர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் மாநகர காவல் ஆணையரை தொடர்பு கொண்டனர்.இதனை அடுத்து பாஜக சார்பில் இருவர் மட்டும் மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்காக பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி மதுரை மேற்கு மாவட்ட பாஜக ஓபிசி பிரிவு தலைவர் வேல்முருகன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவர் கோவிலில் இருந்து சிவாச்சாரிகள் துணையுடன் மலைக்கு சென்றனர்.திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.அதனை தொடர்ந்து மலை மேல் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.இதனை தொடர்ந்து பாஜகவினர் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று புனித தீர்த்தத்தை கலசத்தில் ஏந்தி வந்தனர்.சிக்கந்தர் பாதுஷா சமாதி அருகே தரிசிக்க வந்த கேரளா பக்தர்கள் அயோத்தி ராமர் கோவில் சொல்லும் தீர்த்தத்தை தொட்டு வணங்கி பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதேபோல் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் தீர்த்தத்தை தொட்டு வணங்கினர்.இஸ்லாமிய சகோதரர்கள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து கொண்டு Stat தீர்த்தத்தை தொட்டு வணங்கியது சமய நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியது.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com