கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட இரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி மனு..
இராமநாதபுரம், பிப்.10- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும். இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் முகாம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
இராமேஸ்வரம் – சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும். கொரானோ பொது முடக்கத்திற்க்கு முன் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இராமேஸ்வரம் வரை புதிய ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்தார்.
You must be logged in to post a comment.