53
மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சார்பில் பரிசோதனை முகாம் இன்று நடந்தது. தனித் துணை ஆட்சியர் கண்ணா கருப்பையா தலைமை வகித்தார்.
இதில் 104 பெண்கள், 39 ஆண்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் தொடர்பாக டாக்டர்கள் சுஹைனா, ராஜ வினோதினி தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரித்த 2 பெண்கள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் தலைமையில் முதுநிலை சுகாதார ஆய்வாளர் மெய் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
You must be logged in to post a comment.