Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில்ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில்ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்..

by Askar

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்..

 தமிழக வனத்துறை, ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல், காஞ்சரங்குளம், சித்திரங்குடி, மேலச்செல்வனூர் ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்குள்ள ஷிங்லே தீவு, மனோலி தீவு, அரிச்சல்முனை, கடுகுசந்தை, வாலிநோக்கம், உப்பூர், அரியாங் குண்டு, மலட்டாறு, கிளியூர் கண்மாய், ஆர் எஸ் மங்கலம் கண்மாய் உள்பட 26 இடங்களில் இப்பணி நேற்று ( ஜன.27) துவங்கி 2 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இப்பணியில் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் தலைமையில் பறவை வல்லுநர்கள், கல்லூரி மாணாக்கர் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com