Home செய்திகள் உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; மாவட்ட ஆட்சியர் மலரஞ்சலி செலுத்தினார்..

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; மாவட்ட ஆட்சியர் மலரஞ்சலி செலுத்தினார்..

by Askar

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; மாவட்ட ஆட்சியர் மலரஞ்சலி செலுத்தினார்..

ராமநாதபுரம், ஜன.27- ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன், 59. வெளி நாட்டில் வேலை பார்த்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பி விவசாயம் செய்து வந்தார். ஜன.22 இரவு இரு சக்கர வாகனத்தில் தேவிபட்டினம் சாலையில் ஊர் திரும்பினார். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இதனையடுத்து முருகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி மற்றும் 2 மகள் உள்ளிட்ட உறவினர்கள் விரும்பினர். இதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தமிழ்நாடு அரசு சார்பில் செங்கமடை முருகன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, செங்கமடை மயானத்தில், காவல் துறை சார்பில் 21 குண்டு முழங்க முழு அரசு மரியாதையுடன் முருகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மருத்துவக்குழுவினர் உடனிருந்தனர்.

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com