ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்டில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோட்டைராஜா தலைமையிலான குழுவினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பௌசுல்லா என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் கண்ணன் என்பவர் எடுத்து வந்த மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 5 டீசர்ட் பண்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுபோல திணையத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ 97 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
59
You must be logged in to post a comment.