Home செய்திகள்உலக செய்திகள் இராமநாதபுரத்தில் 6-வது புத்தக திருவிழா ! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டுகோள் !!

இராமநாதபுரத்தில் 6-வது புத்தக திருவிழா ! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டுகோள் !!

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் பல்வேறு அலுவல் பணி காரணமாக வெளியூரில் உள்ள காரணத்தினால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 6வது புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான அரங்குகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்து படித்து பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள், மூலுகை கண்காட்சி, ஒவிய கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி பட்டறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும். புத்தக படிப்பு என்பது இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கு விப்பதற்காக நடத்தப்படுகிறது. புத்தக வாசிப்பு என்பது நம்முடைய வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டத்திலும் நடத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.இந்த அறிய வாய்பை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு புத்தக வாசிப்பை தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன் ஒவ்வொருவரும் புத்தகங்களை நேசித்து வாழ்வில் வளம் பெற வேண்டுமென தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், இராமநாதபுரத்தில் இன்று 6ஆவது புத்தக திருவிழா நடைபெறுகிறது. இராமநாத புரத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக இராமேஸ்வரம் இந்திய திருநாட்டின் நுழைவுப்பகுதியாக இருப்பது பெருமையான ஒன்றாகும். அதேபோல் உலகளவில் பேசப்பட்ட தலைவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த பூமி இது என்பது நமக்கு கிடைத்த பாக்கியமாகும். இத்தகைய சிறப்புமிக்க நம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. எல்லோருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்து வருகின்றன. அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது இலட்சியம் நிறைவேறும். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைக்கும். அது நமக்காக ஏற்படுத்தக்கூடிய நிரந்தர தீர்வு அல்ல. அதே வேலை ஒரு புத்தகத்தை நாம் முழுமையாக படிக்கும் பொழுது அதை அறிந்து கொள்வது மட்டுமின்றி தேவையான நேரங்கள் எல்லாம் பார்த்து சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் புத்தகம் இருந்து வரும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசே ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்த உத்தரவிட்டு நடைபெற்று வருகிறது.இது வெறும் புத்தக கண்காட்சி அல்ல. மாணவ பருவத்தில் நாம் திட்டமிட்ட ஒரு சில புத்தகங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்படும் ஆனால் இது போன்ற விழாக்களின் வாயிலாக பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கப்பெறும் இது போன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தவறாமல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். சில புத்தகங்கள் அதிக விலை என்றால் மாணவர்கள் குழுவாக சேர்ந்து புத்தகம் வாங்கி ஒருவர் பின் ஒருவராக படித்து பயன்பெறலாம். நமது இலக்கு என்பது ஒவ்வொருவரும் புத்தகத்தை வாசிப்பது என்பதை விட ஒவ்வொருவரும் நேசிப்பு தன்மையை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்ற சிறந்த வாசகமாக தேர்வு செய்யப்பட்டு வாசகத்தை எழுதிய கீழக்கரை அமிர்த வித்யாலயா பள்ளி மாணவி சுவாஸ்திகா ஹரிணியை பாராட்டி ரூ.2000/- மதிப்பீட்டில் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று முதல் 12.02.2024 வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுவதுடன், தொடர்ந்து கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , இளைய மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.டி.பிரபாகரன், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவின் தங்கம் , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!