Home செய்திகள் தமிழகத்திற்கு முன் மாதிரியாக ராஜஸ்தானிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் பொது மக்கள் ஆர்வம்.

தமிழகத்திற்கு முன் மாதிரியாக ராஜஸ்தானிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் பொது மக்கள் ஆர்வம்.

by mohan

தமிழ்நாட்டில் தொடர்ந்து குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் வீடு தோறும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஒரு சிலர் தனது வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேமித்தனர். அந்த திட்டம் காலப்போக்கில் கைவிடப்பட்டது. தமிழக அரசும் தீவிர படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு தமிழக அரசியலில் சில மாற்றங்களினால் இன்னும் மழை நீர் சேகரிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மந்த நிலையாகவே செயல்பட்டு வருகிறது.தற்போது மழை பெய்யாவிட்டால் தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஜீரோ டே ஏற்ப்பட்டு இருக்கும்.ஆனால் தமிழகத்தின் திட்டத்தை முன் மாதிாியாகக் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் வெற்றிகரமாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ராஜஸ்தான் என்றாலே பாலைவனம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். ராஜஸ்தானில் வசிக்கும் மக்கள் வீடு தோறும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீர் சேமிக்கப்படுவது தமிழக மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் பிளாஸ்டிக் ட்ரம்களில் துளையிட்டு அதற்குள் கற்களை போட்டு மண்ணுக்குள் புதைத்து மழை நீரை சேமித்து வருகின்றனர்.

தமிழக அரசால் கைவிடப்பட்ட திட்டம் தற்போது ராஜஸ்தானில் சிறப்பாக நடைபெறுவதை பல்வேறு மாவட்டம் , மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!