Home செய்திகள் இராஜபாளையம் – தென்னை மரங்களில் பருவ நிலை மாற்றத்தினால் ரூகோஸ் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை சார்பில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

இராஜபாளையம் – தென்னை மரங்களில் பருவ நிலை மாற்றத்தினால் ரூகோஸ் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை சார்பில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தென்னை விவசாய பணியில் மாவட்ட அளவில் 10 ஆயிரம் ஹெக்டேர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக இராஜபாளையம் பகுதியில் 3000 ஹெக்டேர் தென்னை பயிரிடப்பட்டுள்ளது .இதில் 1500 ஏக்கர் தென்னை மரங்களில்சுருள் வெள்ளை தாக்கப்பட்டு தென்னை மரங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆகையால் தென்னை மரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது கூறித்து மத்திய திட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ராகேந்திரன், இராஜபாளையம் உதவி இயக்குனர் ஆகியோர் ஆலோசனை படி வேளாண்மை அலுவலர் தலைட்சுமி சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டையிட்டு முட்டைகளை மெழுகு போன்ற வெள்ளை நிற துகள்கள் மூடியிருப்பதால்     இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த வெள்ளை ஈக்கள் ஓலையின் உட்புறத்தில் கூட்டமாக அமர்ந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி வளர்ச்சியை பாதிப்பை ஏற்ப படுத்துவதால்இவ்வகை வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் பகுதியில் விழுந்து பரவுகிறது.

இந்த தேன் போன்ற திரவத்தின் மீது கரும்பூசணம் வளர்வதால் தென்னை ஓலையில் தற்காலிகமாக கருப்பு நிறமாக மாறிவிடும் இதனால் ஒளிச்சேர்க்கை தற்காலிமாக பாதிக்கப்பட்டு தென்னைமரம் வளர்ச்சி குன்றிவிடுகின்றது.ஆகையால் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளில் உட்பகுதியில் படுமாறு விசைத்தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீச்சி அடித்து தெளிப்பதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவது குறையும்.பைரித்திராய்டு மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லி கள் நன்மை செய்யும் பூச்சிகளை அழித்து விடுவதால் அவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. எனவே மிக அதிக அளவில் தாக்குதல் இருந்தால் என்கார்சியா , கிரைசோபிட் ஒட்டுண்ணிகள் இலலாத பட்சத்தில் தேவைப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் தாவர பூச்சிக்கொல்லி மருந்து அசாடிராக்டின் 2ml அல்லது வேப்பெண்னை 30ml என்ற அளவில் ஒரு மில்லி ஒட்டு திரவம் சேர்த்து தென்னை ஓலைகளில் அடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.

பயிற்சி அளித்து வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!