கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி பிரார்த்தனை….


இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில வருடங்களாகவே போதுமான மழை இல்லாததால். ஊரில் உள்ள பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போர் போடும் நிலமை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆடு, மாடு போன்ற வாயில்லா ஜிவராசிகளின் நிலையை நினைக்கும் போது மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மரம் நடும் பணி நட்ட மரங்களை பராமரிக்கும் பணி. பறவைகளுக்கு கூடு அமைக்கும் பணியுடன் உணவு வைக்கும் பணியும் நடைபெற்றது அதில் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும் பணியில் ஈடுபடும் போது ஆர்வமாக ஓடி வந்து தண்ணீரை குடித்து சென்றதை பார்ககும் போது தண்ணீரின் தேவை நமக்கு மட்டுமா இந்த உயிர்களுக்கும் தேவை இருப்பதை உணர்த்தியது.

இன்று காலை 7:30 மணிக்கு கீழக்கரை இஸ்லாமிய பள்ளி விளையாட்டு மைதானத்தில். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கீழக்கரை அனைத்து கிளையின் சார்பாக மழை தொழுகை நடைபெற்றது. இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.